செவ்வாய், 24 நவம்பர், 2009

அமைதி தேடு (கவிதை)

உன்னைச் சுற்றிப் பார்
உள்ளவைகளில் நல்லவையுண்டு தீயவையுண்டு
கண்ணை மூடிக் கொண்டால் உலகம்
இருண்டா போய்விடும்?
கற்றுக்கொள் நல்லவை பெற்றுக்கொள்!
கசடில்லாத பொன்னும் மணியும் பூவிலுண்டோ?
அல்லவை ஒதுக்கி நல்லவை தேடு,
நல்லமைதி நாடு!
சுவனம் ஆகும் வீடு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக