சனி, 19 ஜூன், 2010


Internet. இணைய வலை. ஒருவரோடொருவர் இணைக்கும் வலை. நாம் விரும்புகின்ற செய்திகளை, மனிதர்களை- மீன்களை வலை வீசிப் பிடிப்பது போலப் பிடித்துக் கொள்ளலாம். இணையம் என்பது ஒரு கடல். அதன் வளர்ச்சி நிமிடத்திற்கு நிமிடம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டியை நாம் இடியட் பாக்ஸ் என்று கூறி வந்தோம். ஆனால் இப்போது கணிணியின் இணைய வலை மயக்கும் மாய வழியாக மாறி வருகிறது. குறிப்பாக இளைஞர்களை இழுத்துக் கொள்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது இளைஞர்களின் உழைப்பு. இணைய வலையில் மயங்கிப் போகும் இளைஞர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மறந்து அதிலேயே ஐக்கியமாவது அல்லது அரட்டைப் பெட்டியிலேயே அளவளாவிக் கொண்டே வேலை செய்வது வேலையில் முடக்கத்தை ஏற்படுத்துகிறது. அண்மையில் சில அலுவலகங்கள் orkut, face book போன்றவற்றை அலுவலக நேரத்தில் இயக்க முடியாமல் செய்துள்ளனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்:அலுவலக நேரம் தொடங்கியவுடன் வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் போக்கு ஊழியர்களிடத்தில் இருபபதாகச் சொல்கின்றனர் . ஊர், நகரம் என நாடெங்கும் இவை தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கூறுகின்றனர். கத்தியோ, கணினியோஅது பயன் படுத்துவதைப் பொறுத்து நன்மையையும் தீமையும்!

ஞாயிறு, 16 மே, 2010

சற்றே திரும்பிப் பாருங்கள்!!!

எனக்குப் பிடித்த எழுத்து இந்த நீலம். இதற்கு ஒரு காரணம் ஒன்று உண்டு. ஆனால் அதைச் சொல்ல அத்தனை ஒன்றும் அவசியமில்லை. காரணத்தைக் கேட்டால் இதென்ன பெரிய விஷயமா என்று கூறி விடுவீர்கள். ஆகையால் சொல்லாமல் இருப்பதே சரிஎன்று தோன்றுகிறது. நாம் அதிகம் நம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் களமாக இந்த வலைப்பதிவுகள் உள்ளன. உண்மைதான். மனிதர்கள் யாரும் அதிகமாக அடுத்தவர் பேச்சைக் கேட்பதில்லை. நாம் ஏதேனும் சொல்ல முனைந்தால் நம்மில் பலர் எழுந்து சென்று விடுவார்கள். இந்த இணையத்தில் அதிக நேரம் செலவிட்டலோ நீ அதில் அப்படி என்ன செய்கின்றாய் என்று விசாரிப்பார்கள். அதுவும் அக்கறையால் அல்ல. ஒரு வித எரிச்சலின் வெளிப்பாடுதான் அதுவும்.